Wednesday 6 March 2013

உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல்.........!!

உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல்.........!!

1) நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும்.

2) உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

3) உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி,

4) காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

5) வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

6) குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

7) உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

8) உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

குறிப்பு :

வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.