மருத்துவ குணம் நிறைந்த ''சுரைக்காய்''

மருத்துவ குணம் நிறைந்த ''சுரைக்காய்''

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
"ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி(ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்த இறைச்சிதுண்டுகளும் சுரைக்காயும் போடப்பட்ட குழம்பையும் நபி(ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி(ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி விட்டேன்!" ஹதீஸ் புகாரி எண்:2092.

அனஸ்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றேன். அவர் நபி(ஸல்) அவர்கள் முன்னே 'ஸரீத்' எனும் உணவு இருந்த ஒரு தட்டை வைத்தார். பிறகு தம் வேலையைப் பார்க்கச் சென்றார். (அத்தட்டில்) நபி(ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார்கள். நானும் அதைத் தேடி எடுத்து அவர்கள் முன்னே வைக்கலானேன். அதற்குப் பின் நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.ஹதீஸ் புகாரி எண்:5420.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.